ஹைதராபாத் பாலாப்பூர் விநாயகருக்குப் படைக்கப்பட்ட 21 கிலோ லட்டு... ரூ.39 லட்சத்திற்கு ஏலம் எடுத்த பக்தர்!

 

ஹைதராபாத் பாலாப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலைக் கரைப்பு ஊர்வலத்தின் போது இடம்பெற்ற பிரசித்தி பெற்ற பிரசாத லட்டு ஏலம், புதிய சாதனை அளவாக 39 லட்ச ரூபாய்க்கு விலைபோயுள்ளது.

விநாயகர் சிலை கரைப்பின் இறுதி நாளில் வழக்கமாக நடைபெறும் பாலாப்பூர் லட்டு ஏலத்தில், 21 கிலோ எடை கொண்ட இந்தச் சிறப்புப் பிரசாத லட்டு கடும் போட்டிக்கு இடையே 39 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அர்பன் ரியாலிட்டி குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சமா பிரணீத் என்பவர் இந்த பெருந்தொகையைச் செலுத்தி லட்டை ஏலத்தில் கைப்பற்றினார்.

இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்படும் முழு தொகையும் பாலாப்பூர் பகுதியின் உள்ளூர் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.