நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் இன்று சென்னை வருகை!

 

நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய 21 தமிழர்கள், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர்.

கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர். இதில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் காத்மண்டுவிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தனர்.

டெல்லி சென்றடைந்த தமிழர்களைத் தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வரவேற்றதுடன், தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். டெல்லியிலிருந்து இரவு 8 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்படும் அந்த 21 பேரும் இன்று இரவு சென்னை வந்தடைகிறார்கள்.