22,195 காலி பணியிடங்கள்... 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு!
மத்திய அரசின் ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப்-டி (Group D) எனப்படும் Level-1 பணியிடங்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியின் பெயர்: Level 1 (Group D)
மொத்த காலியிடங்கள்: 22,195
சம்பளம்: மாதம் ரூ. 18,000/- (இதனுடன் கூடுதல் படிகளும் உண்டு)
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஐ.டி.ஐ (ITI) முடித்திருக்க வேண்டும் அல்லது NCVT வழங்கிய தொழில் பழகுநர் (Apprenticeship) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு).
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நான்கு நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
கணினி வழித் தேர்வு (CBT): பொது அறிவு, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த கேள்விகள் இடம்பெறும்.
உடற்தகுதித் தேர்வு (PET): ஓட்டம் மற்றும் எடை தூக்குதல் போன்ற உடல் திறன் சோதனைகள்.
சான்றிதழ் சரிபார்ப்பு (DV): கல்வி மற்றும் வயதுச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
மருத்துவப் பரிசோதனை (ME): உடல் தகுதி உறுதி செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி / எஸ்டி / பெண்கள் / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளிகள்: ரூ. 250/-
இதர பிரிவினர்: ரூ. 500/- (தேர்வு எழுதிய பிறகு, விதிகளுக்கு உட்பட்டுக் கட்டணத் தொகை விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்குத் திருப்பி அனுப்பப்படும்).
முக்கியத் தேதிகள்:
விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: 31.01.2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02.03.2026
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதியுள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.