undefined

 உஷார்... கிரிப்டோ கரன்சி பெயரில் ரூ.26 லட்சம் மோசடி!

 
 

கிரிப்டோ கரன்சி வாங்குவதாக கூறி ரூ.26 லட்சத்துக்கும் மேல் பணம் மோசடி செய்யப்பட்டதாக சென்னை அரும்பாக்கம் பகுதியில் புகார் எழுந்துள்ளது.அரும்பாக்கத்தைச் சேர்ந்த பட்டதாரி சேத்தன் (25), சமீபத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் டெலிகிராம் மெசேஜிங் ஆப்ஸ் வழியாக சேலத்தை சேர்ந்த சக்தி என்பவருடன் அறிமுகமானார். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், தன்னிடம் விற்பனைக்கான கிரிப்டோ கரன்சி இருப்பதாகவும் சக்தி கூறியுள்ளார்.

இதனை சேத்தன் தனது நண்பர்கள் — வேலப்பன்சாவடியில் வசிக்கும் எல்ஐசி முகவர் லாரன்ஸ், மும்பையைச் சேர்ந்த செந்தில் குமார், மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கிரண்குமார் ஆகியோருடன் பகிர்ந்துள்ளார். பின்னர் சக்தி வழங்கிய வங்கி கணக்குக்கு மூவரும் சேர்ந்து மொத்தம் ரூ.26.55 லட்சம் அனுப்பியுள்ளனர்.

ஆனால், பணம் அனுப்பிய பின்னரும் அவர்களுக்கு எந்தவிதமான கிரிப்டோ கரன்சியும் வழங்கப்படவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சேத்தன் மற்றும் அவரது நண்பர்கள் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில், போலீசார் மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, டெலிகிராம் வழி பணம் பெற்ற சக்தி மற்றும் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!