நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி!
Nov 27, 2026, 06:37 IST
கிரைஸ்ட்சர்ச் ஏக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும் நியூசிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசிப் பந்தில் டெவோன் கான்வேயை (31 ரன்கள்) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தித் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
கேப்டன் டாம் லாதம் அரைசதம் கடந்து களத்தில் உள்ளார். பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாகக் குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.