தவெகவில் 3 மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் - தலைமை அதிரடி!

 

கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக  நிர்வாகி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 முக்கிய நிர்வாகிகளைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

நசீப் - நீலகிரி மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் (கேரளாவில் கைது செய்யப்பட்டவர்). ஸ்ரீஜித் - மாவட்ட துணைச் செயலாளர். அமீர் அப்பாஸ் - மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகிய 3 பேரும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாகப்பட்டினத்தில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் என்பவர் சிக்கிய சம்பவம் விவாதமான நிலையில், தற்போது கேரள போதைப்பொருள் வழக்கில் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் 3 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.