அமெரிக்க உணவகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

 

அமெரிக்காவில் உணவகத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தில் உள்ள டுவின் பால்ஸ் நகரின் இயங்கி வரும் பிரபல துரித உணவகம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உணவகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர், அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை நோக்கியும் ஊழியர்களை நோக்கியும் திடீரெனத் தன் கையிலிருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இந்த கோரத் தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரைத் தற்காப்பிற்காகச் சுட்டுக் கொன்றனர்.

அமைதியான சூழலில் வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்கப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.