திருவள்ளூர் அருகே கோர விபத்து: லாரி மீது ஆட்டோ மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே லாரி மீது ஆட்டோ மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடும்பத்தினருடன் கோயிலுக்குச் செல்வதற்காக ஆட்டோவை ஓட்டிச் சென்ற லோகநாதன், எதிர்பாராதவிதமாக வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ மோதியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/_rEw9aapnQI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/_rEw9aapnQI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இந்த எதிர்பாராத விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மற்ற 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.