undefined

லாரி மீது கார் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக பலி..!!

 

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5பேரில் 3பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடும் 2 நபர்களையும் மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். 

இந்த பயங்கர விபத்து காவல்துறையினர் வழக்கு பதிந்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.