200 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த 3 வயது சிறுமி! 10 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு!

 

 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் சுமார் 200 அடி ஆழமுள்ள போர்வெல்லில் தவறி விழுந்த 3 வயது சிறுமி, விடிய விடிய நடைபெற்ற மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.ஃபரிதாபாத் சிஹி கிராமத்தில் நேற்று மாலை சிறுமி நேஹா மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது குழந்தைகள் ஏறி விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக நேஹா தவறி, அருகில் இருந்த திறந்த போர்வெல்லுக்குள் விழுந்தார் 

சிறுமி விழுந்த போர்வெல் சுமார் 200 அடி ஆழம் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போர்வெல் சுமார் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாகவும், அதற்கு போடப்பட்டிருந்த மூடி சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டிருந்ததாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்தார் 

allowfullscreen

ம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து NDRF மற்றும் SDRF குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரவு நேரம் என்பதால் சம்பவ இடத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டதுடன், போர்வெல்லுக்குள் கேமராவும் செலுத்தப்பட்டு சிறுமியின் நிலை கண்காணிக்கப்பட்டது.  பல மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில், NDRF, SDRF, அரியானா தீயணைப்புத் துறை, போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து செயல்பட்டனர். அதிகாலை 3.50 மணியளவில் சிறுமி பத்திரமாக போர்வெல்லில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டார் 

மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் பயன்படுத்தப்படாமல் இருந்த போர்வெல்லின் மூடி அகற்றப்பட்டிருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற திறந்த போர்வெல்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.