மாளவ்ய யோகத்தால் செல்வத்தைக் குவிக்கப் போகும் 3 ராசிகாரர்கள்... அள்ளி அள்ளி கொடுக்கப் போகும் சுக்கிரன்!

 

ஜோதிட சாஸ்திரத்தில் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான 'மாளவ்ய யோகம்' சுகபோகங்கள், செல்வம் மற்றும் கலைகளுக்கு உரிய கிரகமான சுக்கிர பகவானால் உருவாக்கப்படுகிறது. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் அல்லது உச்ச வீடான மீனம் ஆகிய ராதிகளில் ஒன்றில் அமர்ந்து, ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களில் (1, 4, 7, 10) அமையப்பெறும் போது இந்த ராஜயோகம் உருவாகிறது.

மாளவ்ய யோகத்தால் ஆடம்பரமான வாழ்க்கை முறை, சொந்தமாக வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கலை, ஊடகம், சினிமா, ஃபேஷன் மற்றும் வணிகத் துறைகளில் இருப்பவர்களுக்கு அசுர வளர்ச்சி இருக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால், இந்த யோகம் இவர்களுக்கு நேரடியான மற்றும் வலிமையான பலன்களை வழங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், பொருளாதார நிலையில் உயர்வும் ஏற்பட்டு, நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.

துலாம்: துலாம் ராசிக்குச் சுக்கிரன் ராசிநாதனாக விளங்குவதால், மாளவ்ய யோகத்தின் மூலமாக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகளைக் காண முடியும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம், சமூகத்தில் அந்தஸ்து மற்றும் கௌரவம் உயர்தல், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்ற சிறப்பான பலன்கள் உண்டாகும்.

மீனம்: சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாக மீனம் விளங்குவதால், இந்த யோகம் இவர்களுக்குக் கோடீஸ்வர யோகத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். பொருளாதார வளர்ச்சி, மனநிம்மதி, குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஆகியவை இவர்களை தேடிவரும்.