undefined

 30000   ஊழியர்கள் பணி நீக்கம்... அமேசான் திடீர் அறிவிப்பு! 

 

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பல துறைகளில் வேகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், குறிப்பாக ஐடி துறையில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெருமளவில் பணி நீக்கம் செய்து வருகின்றன. டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் பின் அமேசானும் இப்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

மென்பொருள், கிளவுட் சேவை, இ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளில் உலகளவில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம், தற்போது 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், அவர்களில் 10 சதவீதம் பேர் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிலிருந்து 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்ட நிலையில், இது இரண்டாவது கட்டமாக அமேசானின் பெரிய பணி மறுகட்டமைப்பு நடவடிக்கையாகும். கொரோனா காலத்தில் தேவைக்கு மீறி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதால் ஏற்பட்ட செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமேசான் ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!