இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து பலப்பரீட்சை!
Aug 10, 2026, 06:20 IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் 3-வது ஒருநாள் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இன்றைய 3-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் தனது முன்னிலையை மேலும் வலுப்படுத்த ஆப்கானிஸ்தான் அணி தீவிர முயற்சி செய்யும். சொந்த மண்ணில் விளையாடி வரும் அயர்லாந்து அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்யும் நோக்கில் களமிறங்குகிறது.