தென்கொரியாவின் ஜெஜூ தீவில் 3 நாட்களில் 4 சடலங்கள் மீட்பு - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

 

தென்கொரியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான ஜெஜூவில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்குள் 4 சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை முறையாக விசாரிக்காமலேயே, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தவறான தகவல்களைக் கூறி சுமார் 298 வழக்குகளைத் தனியொருவராக முடித்து வைத்ததாக 'பூ' என்ற காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் விசாரணை இல்லாமல் பாதியில் முடித்த வழக்குகளில் தொடர்புடைய 37 வயது பெண் ஜாங் மி-ரான் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க நபர் உள்ளிட்டோர் பிற்காலத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சதி மற்றும் அலட்சியப் போக்குடன் தொடர்புடைய ஜெஜூ மேற்கு காவல் நிலையத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் தளங்கள் உட்பட 4 உயர் காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், காணாமல் போனோர் வழக்குகளைக் கையாளும் முறைகள் மற்றும் காவல் துறையின் கண்காணிப்பு அமைப்புகளை முழுமையாகச் சீரமைக்கவும் தென்கொரிய அதிபர் லீ ஜே-மியோங் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகர் சியோல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதற்கு முன்பு அவசரமாக முடிக்கப்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர மறுஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.