உறைந்த ஏரியில் மூழ்கிய 4 சிறுவர்கள்!! காப்பாற்ற சென்ற 10 வயது சிறுவனும் பலியான சோகம்!!
இங்கிலாந்து நாட்டின் பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்த ஏரியில் விழுந்த மூன்று சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்த 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் தற்போது கடும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில் சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்து போன Babbs Mill ஏரியில் 3 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உறைந்து இருந்த ஏரிக்குள் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர். உறைந்த ஏரிக்கு தவறி விழுந்த மூன்று சிறுவர்களின் கூக்குரல் கேட்ட அங்கிருந்த ஜாக் ஜான்சன் என்ற 10 வயது சிறுவன் ஏரியில் குதித்து அவர்களை காப்பாற்ற தைரியமாக முயற்சித்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நான்கு சிறுவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு, ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையிலும், பேர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.