திண்டுக்கல் விபத்தில் 4 சிறுவர்கள் பலி: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இரங்கல்!
திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மோதி நான்கு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த விபட்டுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.
விளையாடித் திரியும் வயதில் எத்தவறும் செய்யாத பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்ட விவகாரம் எவராலும் எளிதில் கடந்துபோக முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை இழந்து கதறித் துடிக்கும் குடும்பத்தினருக்கு இந்த உலகத்தில் எந்த ஆறுதலும் ஈடாகாது என்றும், இந்த ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தில் ஒரு சகோதரியாக அவர்களுடன் நிற்பதாகவும் அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு குழந்தைகளைக் காப்பாற்ற முனையாமல் தப்பியோடிய மனிதநேயமற்ற செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் எனக் கண்டித்துள்ள அவர், வடமதுரை காவல்துறையினர் உடனடியாக வாகனத்தையும் குற்றவாளியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.