தென்காசியில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 4 பேர் பலி!
தென்காசி மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் தீவிர டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ரிஹானா மேரி மற்றும் நர்மளா (27) உள்ளிட்ட 4 பேர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் பல நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகளால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாகத் தலையிட்டுத் தென்காசி மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.