4 மாணவிகள் பலியான விபத்து... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் மீது எதிரே வந்த கல்லூரிப் பேருந்து மோதியது. இந்தச் சோக விபத்தில் நான்கு மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.