undefined

மழைக்கால ஆரோக்கியம் மேம்பட இந்த 4 விஷயங்களை மறக்கமா செய்ங்க! 

 

மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இந்நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். இதனைத் தடுக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிறந்த முறையாக நெய் தடவல் கருதப்படுகிறது. நெய் உடலின் பல பாகங்களில் தடவுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொப்புளில் நெய் தடவுவதால் செரிமானம் மேம்பட்டு வயிற்று வலி, வீக்கம், வாயு போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும், வளர்சிதை மாற்றம் சீராகி எடை குறையவும் உதவுகிறது. சருமம் பளபளப்பாக மாறுவதோடு, ஹார்மோன்கள் சமநிலை அடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். மூக்கில் நெய் தடவுவது சைனஸ் பிரச்சனைகளை குறைப்பதோடு, மூக்கடைப்பு மற்றும் தலைவலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது. கண்களைச் சுற்றி நெய் தடவுவது கண் சோர்வை குறைத்து பார்வை தெளிவாக இருக்க உதவுகிறது.

அதேபோல் பாதங்களில் நெய் தடவுவது கால் வலி, வீக்கம், வறட்சி போன்றவற்றை குறைக்கும். இது நரம்பு மண்டலத்தை சீராக்கி மன அமைதியையும் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. தினமும் சிறிதளவு நெய்யை தொப்புளில், மூக்கில், கண்கள் சுற்றிலும், பாதங்களிலும் தடவுவது உடல், மனம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான வழி என நிபுணர்கள் கூறுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!