undefined

40 ஆடியோ, 20 வீடியோ..  சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தை மிரட்டிய பெண் காவலர் மீது வழக்குப்பதிவு!

 

தூத்துக்குடியைச் சேர்ந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரின் மீது அந்தரங்க வீடியோ, ஆடியோ பதிவுகளை காட்டி ₹10 லட்சம் கோரி மிரட்டிய பெண் போலீஸ்காரர் மற்றும் நிருபர் உட்பட 5 பேர்மீது கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டருடன், கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து மாற்றுப்பணியில் வந்த பெண் போலீஸ் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமான அந்த பெண் போலீஸ்காரர், சப்-இன்ஸ்பெக்டருடன் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை பதிவு செய்து வைத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பதிவுகளை வைரலாக்குவதாக மிரட்டி, ₹10 லட்சம் கோரியதாகவும், இதற்காக ஒரு நிருபருடன் சேர்ந்து சதி செய்ததாகவும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆடியோ, வீடியோ பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் பெண் போலீஸ்காரர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இருவரும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சில ஆடியோ பதிவுகள் வெளியானதும், செப்டம்பர் 17ஆம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்காக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார்.

புகார் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் பெண் போலீஸ், நிருபர் உள்ளிட்ட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்காலிகமாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?