ஒரு    நிமிடத்தில்   42  முறை  ஸ்குவாட்ஸ்  செய்து  இந்திய  வம்சாவளி  பெண்  சாதனை!!

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஸ்குவாட்ஸ் செய்து உடற்பயிற்சியில் உலக சாதனையை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பெண் கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் . 25 வயதான கரன்ஜீத்  சிறந்த உடற்பயிற்சி மூலம் ஸ்குவாட்ஸ் செய்து  உலக சாதனையை  நிகழ்த்தியுள்ளார். ஒரு நிமிடத்தில் அதிக உடல் எடையுடன் ஸ்குவாட்ஸ் எனப்படும் உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியில் உலக சாதனையை படைத்துள்ளார்.

பெண்களுக்கான பிரிவில், தனது சொந்த உடல் எடையில், ஒரு நிமிடத்தில் 42 முறைகள் ஸ்குவாட்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார்.  சாதரணமாக ஒருவர் உட்கார்ந்து  எழுந்திரிக்கவே  முடியாத நிலையில் எதையாவது பிடித்துகொண்டு அல்லது. கைகளை தரையில் உன்றி எழுந்திருப்பது வழக்கம். அதில் உடல் நலனில் அக்கரைகாடும் பலர் உடல் எடையை குறைக்க  உடற்பயிற்சி மேற்கொள்வர். அதில் மிகவும் கடினமானது என மிக கை தேர்ந்த உடற்பயிற்சியாளர்கள் கூருவது இந்த ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி.

ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து சீக்கிய பெண் கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் ஒரு நிமிடத்தில் அதிக உடல் எடையுடன் ஸ்குவாட்ஸ் எனப்படும் உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியில் உலக சாதனையை படைத்துள்ளாது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.