குருவாயூரில் ஒரே நாளில் 437 ஜோடிகளுக்குத் திருமணம்.. களைக்கட்டும் ஓணம் திருவிழா!

 

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில், ஆவணி மாதச் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 437 ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடைபெற்றுப் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் திட்டமிடப்பட்டிருந்ததால், பக்தர்களின் வசதிக்காகக் கோயில் சார்பில் 6 சிறப்புத் திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் கூடுதல் புரோகிதர்களும் நியமிக்கப்பட்டனர்.

அதிகாலை 4:10 மணி முதல் மதியம் வரை இடைவிடாது தாலி கட்டும் நிகழ்வுகள் வரிசையாக நடத்தப்பட்டன. ஒரே நாளில் 437 திருமணங்கள் நடந்ததால், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் குருவாயூர் கோயில் வளாகம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.