44 ஆண்டு சாதனை தகர்ப்பு... ஆசிய விளையாட்டு மல்யுத்தம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் நிதேஷ்!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் சிவாச் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மல்யுத்தத்தின் கிரேக்க ரோமன் பிரிவில், கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு இறுதிச் சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை 97 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட நிதேஷ் சிவாச் படைத்தார்.

காலிறுதியில் துர்க்மெனிஸ்தான் வீரர் அமன்பெர்டியை 7-1 என்ற கணக்கிலும், அரையிறுதியில் மங்கோலியா வீரரைக் 9-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

வெள்ளிப் பதக்கம்: தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் யுரி நகஜாட்டோவை எதிர்கொண்ட நிதேஷ், கடும் சவாலுக்குப் பிறகு 0-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.