496 மில்லியன் மக்கள் மீட்பு... இந்தியாவில் தீவிர வறுமை 2.6%-ஆக வீழ்ச்சி - உலக வங்கி அறிக்கை!
உலக வங்கி வெளியிட்டுள்ள 'வறுமை மற்றும் சமநிலை அறிக்கை' தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் தீவிர வறுமை விகிதம் மிக வேகமாகக் குறைந்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டில் 27.1% ஆக இருந்த தீவிர வறுமை விகிதம், 2023-24 ஆம் ஆண்டில் 2.6% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது. குறைந்த-நடுத்தர வருமானக் கோட்டின் அடிப்படையில், சுமார் 49.6 கோடி (496 மில்லியன்) மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு $4.20 என்ற அளவிலான வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதம் 57.7%-லிருந்து 16.1%-ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மக்களின் நுகர்வு வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளின் இலவச உணவு தானிய விநியோகம் மற்றும் நேரடி மானியத் திட்டங்கள் ஏழை குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த உறுதுணையாக இருந்துள்ளன.
உலக அளவில் வறுமையைக் மிக வேகமாகக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் பாராட்டு தெரிவித்துள்ளது.