சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்!

 

நெதர்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான கோரச் சம்பவம் உலகளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் இருந்து 45 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து சுவிட்சர்லாந்து நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து ஆல்பின் மாகாணத்தில் உள்ள சுஷி கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.