ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!
Oct 4, 2026, 09:50 IST
ஆப்கானிஸ்தானில் தகார் மாகாணத்தில் உள்ள சட்டவிரோதத் தங்கச்சுரங்கம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானதில், வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தகார் மாகாணம் ஷா அப் மாகாணம் ஹா மஸ்ட பகுதியில் செயல்பட்டு வந்த இந்தத் தங்கச்சுரங்கம் உரிய அனுமதியின்றிச் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது. இச்சரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரெனச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.