கிராமமே பெரும் சோகம்... ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி !
குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் வடவலி கிராமத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியிலதே கிராமத்தை சேர்ந்த பெரோஷா என்ற பெண் சிறுவன், சிறுமிகளுடன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அதில் ஒரு சிறுவன் ஏரிக்குள் விழுந்துள்ளான். அந்த சிறுவனை மீட்க பெரோஷா உட்பட மீதமுள்ள 4 பேரும் ஏரிக்குள் குதித்துள்ளனர். இதில், 5 பேரும் ஏரியில் மூழ்கினர். 5 பேரின் கூச்சல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து அனைவரையும் மீட்டனர்.
அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 5 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், அனைவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் அக்கிராமம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!