ரூ50000 நிவாரண உதவி!! தேநீர் கடை தீவிபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதல்வர் அறிவிப்பு!!

 

தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த  மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவர்  தேநீர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று காலையில் கடையை திறந்து பரபரப்பாக காலை பணிகளை செய்துவந்தார். 


இந்நிலையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து  பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த 48 வயதான  மூசா , 25 வயதான  பிரவின் , 52 வயதான சேகர்  அனைவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களுடன் காலையில் கடைக்கு தேநீர் அருந்த வந்த 66 வயது சுப்பையன், 43 வயதான சுதா, 62 வயதான  சந்திரன், 50 வயதான சுசீலா மற்றும் ஒருவர் உட்பட 8 பேர்  தீக்காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு  சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?