undefined

கடைசி நாளில் 53,00,000 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்! இனி தாக்கல் செய்தால் அபராதம்!

 

நேற்று சென்ற நிதியாண்டு வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 53 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி என ஒன்றிய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தது.  


இந்நிலையில், நேற்றுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. ஆன்லைனில் தங்களது வருமான வரியை நேற்று ஏராளமானோர் தாக்கல் செய்தனர். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000-மும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் நேற்று இரவு 8 மணி வரை 53 லட்சத்து 98 ஆயிரத்து 348 ஐடிஆர்களும், கடைசி 1 மணிநேரத்தில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 505 ஐடிஆர்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரி கணக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?