59 வயதில் 3-வது முறையாக கர்ப்பம்! நேரலை நிகழ்ச்சியில் அறிவித்த  டிவி தொகுப்பாளினி... வைரல் வீடியோ! 

 

 

இங்கிலாந்தைச் சேர்ந்த 59 வயது தொலைக்காட்சி தொகுப்பாளினி ரெனி ஹோண்டர்காம், தான் 12 வார கர்ப்பமாக இருப்பதாக நேரலை நிகழ்ச்சியில் அறிவித்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

GB News presenter Dr Renee Hoenderkamp, 59, left her fellow panellists stunned after revealing live on air that she is 12 weeks pregnant with her third child! Hoenderkamp, who welcomed her first child at 21 and her second at 51, revealed she is expecting a baby girl following three rounds of IVF treatment in Poland using previously frozen eggs. Already a grandmother, the presenter has previously faced criticism for having children later in life but maintains that becoming a mother again in her 50s was one of the best decisions she ever made.

— TheShadeBorough (@theshadeborough) November 15, 2026

ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ரெனி, உறையவைக்கப்பட்ட கருமுட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சை மூலம் மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

அவரது வயது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ரெனி, தனது 66 வயது கணவரை விமர்சிக்காமல் தன்னை மட்டும் விமர்சிப்பது இரட்டை நிலைப்பாடு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக பெண்களுக்கு மட்டும் வயதைக் காரணம் காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.