6 தொகுதி இடைத்தேர்தல்: திமுக - அதிமுக கூட்டணி குறித்து ரகசிய சர்வே எடுக்கும் தவெக!
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ரகசிய சர்வே எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் மறைமுகக் கூட்டணி அமைத்தோ அல்லது இணைந்தோ பொதுவேட்பாளரை நிறுத்தினால் கிடைக்கும் வாக்குகள் எவ்வளவு என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. அதேநேரம், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் தற்போதைய சூழலில் கிடைக்கக்கூடிய வாக்கு சதவீதம் குறித்தும் இந்த ஆய்வில் கணிக்கப்படுகிறது.
ஆட்சியைத் தக்கவைக்க இந்த 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள தவெக தலைமை, பொதுமக்கள் மற்றும் பெண்களின் மனநிலையை அறிய இந்தக் கள ஆய்வை மேற்கொண்டுள்ளது.இந்த சர்வே முடிவுகளுக்கு ஏற்பத் தேர்தல் வியூகங்களை அமைத்து இடைத்தேர்தலை எதிர்கொள்ளத் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது