நடிகை சுகன்யா வீட்டில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு.. நீலாங்கரையில் பரபரப்பு!

 

சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள பிரபல திரைப்பட நடிகை சுகன்யாவின் வீட்டிற்குள் திடீரென பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சுகன்யாவின் வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வீட்டின் பகுதியில் மறைந்திருந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். பிடிபட்ட சாரைப்பாம்புக்கு எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினரின் உதவியுடன் கொண்டு போய் விடப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் அசம்பாவிதம் எதுவும் தவிர்க்கப்பட்டது.