கொடூரம்... 6 கிராம் தங்கம் , 200 கிராம் வெள்ளிக் காப்பு... பெண் அடித்துக் கொலை...!
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்த மாரியம்மாள் (85) என்பவர், நேற்று அதிகாலை மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ரெயில்வே ஊழியரான தங்கவேலின் மனைவியான இவர், கணவர் இறந்ததைத் தொடர்ந்து மகன் தனபால் ரயில்வேயில் வாரிசு அடிப்படையில் கீமேன் பணியில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள் வீட்டின் வெளியில் தூங்கியிருந்தார். அதிகாலை எழுந்த தனபால் வெளியே வந்தபோது, தாயார் இடது பக்க தலையில் அடிபட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
விசாரணையில், மர்ம நபர்கள் மூதாட்டியை தலையில் அடித்து கொன்ற பின், இரு காதுகளிலிருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்ட மொத்தம் 6 கிராம் தங்கநகைகள் மற்றும் காலில் இருந்த 200 கிராம் வெள்ளி காப்பை பறித்து சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!