undefined

 பள்ளத்தாக்கில் பேருந்து  கவிழ்ந்து  6 பேர் பலி!

 

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த கோர விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பிகியாசைன்–விநாயக் சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 17 முதல் 18 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

ஷிலாபானி அருகே காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் பலர் படுகாயமடைந்து பிகியாசைன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த துயர சம்பவம் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உடனடி மற்றும் சிறந்த சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விபத்து இடம் தொலைவில் இருப்பதால் மீட்புப் பணிகளில் சவால்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.