நின்றுக் கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து - 6 பேர் பலி; 30 பேர் படுகாயம்!
Aug 26, 2026, 09:45 IST
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி நடந்த கொடூர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத் - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் கொடூர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்ப்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.