6 மாணவர்கள் உடல்நசுங்கி உயிரிழப்பு... டெல்லி கட்டிட விபத்தில் தொடரும் மீட்புப் பணிகள்!

 

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 6 மாணவர்கள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் பகுதியில் மாணவர்கள் தங்குவதற்காகப் பயன்பாட்டில் இருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென இடிந்து தரமட்டமானது.இந்த விபத்து நிகழ்ந்தபோது அந்தக் கட்டிடத்திற்குள் சுமார் 50 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுறது.

விபத்து குறித்துத் தகவலறிந்ததும் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், துரதிர்ஷ்டவசமாக 6 மாணவர்கள் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.