சென்னையில் 60,216 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

 

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தெருநாய்களுக்குத் தொடர்ச்சியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு முகாமின் மூலம் இதுவரை மொத்தம் 60,216 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களைத் தொடர்ந்து, தற்போது மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் 10 சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் இந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தடுப்பூசி முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.