undefined

 654 செல்போன் எண்கள் முடக்கம் – சைபர் குற்றத் தடுப்பு பிரிவு நடவடிக்கை!

 
 

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மக்களிடமிருந்து கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் சைபர் குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நடவடிக்கையின் போது, வாரணாசி பகுதியில் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 654 செல்போன் எண்களும், 335 ஐஎம்இஐ எண்களும் கண்டறியப்பட்டன. அவற்றை அதிகாரிகள் உடனடியாக முடக்கியுள்ளனர். மேலும், போலியான கால் சென்டர்கள் மூலம் முறைகேடுகள் செய்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த அக்டோபர் மாதம் முழு இந்திய அளவில் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!