உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்த 6 வயது நாய்க்குட்டி 'ஜின்னி லூ'!

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 50-வது ஆண்டாக உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற 'அசிங்கமான நாய்களுக்கான போட்டி' கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து தனித்துவமான தோற்றம்கொண்ட நாய்கள் கலந்துகொண்டன.

போட்டியில் கலந்து கொண்ட 'ஜின்னி லூ' என்ற 6 வயதுடைய பக் இன நாய்க்குட்டி முதலிடத்தைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் 'பிங்கி' என்ற 11 வயதுடைய நாய் 2-வது இடத்தைப் பிடித்தது. 'ஆட்டோ' என்ற 2 வயது நாய்க்குட்டி 3-வது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

வழக்கமான அழகுப் போட்டிகளைப் போலன்றி, தோற்றத்தில் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் நாய்களைக் கொண்டாடும் விதமாக இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குறிப்பாக, உடல் குறைபாடுகள் அல்லது விசித்திரமான தோற்றம்கொண்ட நாய்களை மக்கள் எந்தவித பாரபட்சமுமின்றி மிகுந்த அன்போடு தத்தெடுத்துப் பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்திடுவதை இந்நிகழ்வு முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.