undefined

8 வருஷ காதல்... இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த திருவாரூர் இளைஞர்.. பாரம்பரிய முறைப்படி திருமணம்!

 

எங்களுடையது எட்டு வருஷ காதலுங்க. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு திருமண பந்தத்துல இணைஞ்சிருக்கோம் என்று மலர்ச்சியுடன் பேசுகிறார் யோகதாஸ்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கரையாங்காடு கிராமத்தைச் சேர்ந்த யோகதாஸ் (30) கடந்த 8 ஆண்டுகளாக இந்தோனேஷிய நாட்டை சேர்ந்த டயானா டீபுவுடன் காதல் நடத்தியுள்ளார். யோகதாஸ் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இருவர் நட்பு வளர்ந்து, காதல் உறவாக மாறிய பின்னர், இரு குடும்பங்களும் ஒப்புதல் அளித்து, தமிழ் கலாசாரப்படி இந்து முறைப்படி திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தனர். கடந்த மாதம் செப்டம்பரில் சிங்கப்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கடந்த வாரம் திருமணமான இருவரும் யோகதாஸ் சொந்த ஊரான கரையாங்காடு கிராமத்திற்கு வந்து, அங்கு கரை முத்து மாரியம்மன் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பட்டு சேலை அணிந்த டயானா டீபுவுக்கு யோகதாஸ் தாலி கட்டினார். திருமண விழாவில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?