80-வது சுதந்திர தினம்.. டெல்லி செங்கோட்டையில் கம்பீரமாக நடந்த முழுஅளவிலான அணிவகுப்பு ஒத்திகை!

 

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் முழுஅளவிலான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த இறுதி ஒத்திகை நிகழ்ச்சியில் இந்தியத் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு கம்பீரமான அணிவகுப்பை நடத்தினர்.

அதே போன்று தமிழகத்திலும் சென்னையில் முழு அளவிலான பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படைகளின் இசைக்குழுவினர் எழுப்பிய தேசபக்தி இசையுடன், சுதந்திர தின விழாவில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்வுகளும் தடையின்றி நடக்கும் வகையில் முழுமையான ஒத்திகைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திர தின விழாவினை முன்னிட்டுத் தலைநகர் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.