பிரபல தயாரிப்பாளரின் 8.94 கோடி சொத்துக்கள் முடக்கம்!! பரபரக்கும் திரை உலகம்!!

 

 

கல்வியாளராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் விளங்கி வருபவர் ஐசரி கணேஷ். வெளிநாட்டில் சட்டத்துக்கு புறம்பான வகையில் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் வெளிநாட்டு பரிவர்த்தனையில் முறைகேட்டில் ஈடுபட்டதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் என்பது பிரபல இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரர் மறைந்த ஜி வெங்கடேஸ்வரன் மற்றும் பிரபல தயாரிப்பாளரும் கல்வி நிறுவனமான ஐசரி கே.கணேசன் ஆகிய 2 பேரால் தொடங்கப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதன் மூலம் ரூ.172.8 கோடி மதிப்பிலான பணத்தை வெளிநாட்டு வங்கிகளின் மூலம் ஜிடிஆர் ரசீதுகளை போலியாக உருவாக்கி, அதனை ரூ.16 கோடி பங்குகளாக இந்திய பங்குச் சந்தையில் மாற்றி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குறிப்பிட்ட தொகையின் மூலம் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை மதிப்பீடு செய்யத் தொடங்கியது. அதன் முதல்கட்டமாக ஜி.வி.காம்ப்ளக்சை முடக்க திட்டமிடப்பட்டது. இது தஞ்சாவூரில் பல திரைகளைக் கொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.8.94 கோடி என்று அமலாக்கத்துறையினர் மதிப்பீடு செய்ததுடன் முடக்கி அதிரடி காட்டினார்கள். இதன்படி கடந்த 2020ம் ஆண்டு ஜி.வி பிலிம்ஸ் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அபராதமும் அமலாக்கத்துறை சார்பில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!