ஓட்டுரை கரம் பிடித்த கல்லூரி மாணவி… காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த இளம் ஜோடி…

 

அண்மை காலமாக பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப  காதல் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் ஒரு சில பெற்றோர் காதல் என்றாலே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் தான் பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தென் செங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர், டிராக்டர் ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.

டிராக்டர் ஓட்டுநரான இவரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவியும்   நட்பாக பழகி வந்த நிலையில், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலர்கள் இருவரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றொருக்கு தெரியவந்தது. மகளைவிட 3 வயது குறைந்த இளைஞரை தங்களது மகள் காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும், இந்த முறையற்ற காதலை கைவிடுமாறு மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதனால் அந்த இளம் காதன் ஜோடி, கடந்த 4-ந்தேதி விட்டைவிட்டு வெளியேறிய கோவிலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோட்டூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து காதலர்கள் பெற்றோர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பொள்ளாச்சி அருகே 19 வயதே ஆன இளைஞரை பொறியியல் படிக்கும் 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.