பாலஸ்தீனத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ…  7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியான சோகம்…

 

பாலஸ்தீன காசாவில் உள்ள எட்டு அகதிகள் முகாம்களில் ஜபாலியாவும் ஒன்றாகும், இது 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மற்றும் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும்.   பாலஸ்தீனத்தின் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா பகுதியில்     நான்கு தளங்கள் கொண்ட அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் இந்த கட்டடத்தின் மேல் தளத்தில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென கட்டம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.  குடியிருப்பு வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் கட்டடத்திற்குள் அதிக அளவு பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தீ பரவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.