கொலையான பெண் உயிரோடு வந்த அதிசயம்!! 7 வருடத்திற்கு பின்பு வெளிவந்த மர்மம்!!

 

தாயின் பாசத்தை மிஞ்ச வேறு எதுவும் இல்லை என்பதற்கு சான்றாக உத்திரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம் கொலை குற்ற வழக்கில் போலியாக கைது செய்யப்பட்ட மகனைக் காப்பாற்ற ஒரு தாய் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. மேலும்  கொலையானதாகக் கூறப்பட்ட பெண்ணை பிருந்தாவன் ஆசிரமத்தில் உயிரோடு கண்டுபிடித்த காவல்நிலையத்தில ஒப்படைத்திருக்கிறார் அந்த தாய்.

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி, கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து கோண்டா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு, அதனை தனது மகள்தான் என பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது. இதையடுத்து, பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த 18 வயதே ஆன 12ஆம் வகுப்பு மாணவர் மீது பெண்ணைக் கடத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில்  அவர் அடைக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞரின் தாய் தனது மகன் குற்றமற்றவர் என்பதை உறுதியாக நம்பினார். தனது மகனை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என எண்ணிய தாய் காணாமல் போன சிறுமியை     தேடி அலைந்தார். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு எங்கெங்கோ சென்று எல்லோரிடமும் காட்டி பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.

பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அங்கு குற்றம்சாட்டப்பட்ட நபரின் தாயும் சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் சாமியாருடன் வந்திருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்ததும், அது கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சிறுமி என்பதை கண்டறிந்தார். பின்னர் உடனடியாக காவல்நிலையத்தில் இது குறித்து தகவல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து  அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்தான் இவரா என்பதை உறுதி செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  இதற்கிடையே, இந்தப் பெண்தான் தங்களது மகள் என்பதை அவரது பெற்றோர் அடையாளம் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும்   ஆசிரமத்தில் சேர அப்பெண் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றது போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இறுதியாக தாயில் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.