ஆடிப்பூரம் விழா! தேர் கவிழ்ந்து சரிந்து விழுந்ததில் விபத்து! 10க்கும் மேற்பட்டோர் காயம்!

 

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று காலை நடைப்பெற்ற தேரோட்டத்தின் போது, கொடி அசைக்கும் முன்பாகவே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தொடங்கியதால், தேர் அப்படியே சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆலயத்தில் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆலயத்தில் திருப்பணி செய்து, கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக தான் இந்த புதிய தேர்  செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆடி மாத கொண்டாட்டம் இந்து ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் துவங்கியது. பல பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரோட்டத்தில் கலந்து கொள்ள குவிந்தனர்.

இன்று காலை ஆரப்பூரத் தேரோட்டம் 9 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேரோட்டம் துவங்குவதற்கு முன்பாகவே 8.50 மணிக்கு எல்லாம்,  கொடி அசைக்கும் முன்பாகவே பக்தர்கள் வேக வேகமாக வடம் பிடித்து இழுத்தனர். இதனால், தேர் சாய்ந்து, சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தேர் அருகில் இருந்த பக்தர்கள் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தேர் இரண்டடி நகர்ந்த நிலையில், அப்படியே சரிந்து விழுந்தது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேரின் பக்கவாட்டில் நின்றிருந்த 5 பெண்கள் உள்பட 10 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். 

உடனடியாக காயமடைந்தவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேர் கவிழ்ந்த விபத்தை நேரில் பார்த்தவர்களில் 5 பேர்  அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். 

இந்த விபத்து குறித்த தகவலறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பொக்லைன் இயந்திரம் மூலமாக கவிழ்ந்த தேரை நிலை நிறுத்தும் பணியினையும் மேற்கொண்டனர். 

தேரோட்டம் துவங்கி அதே இடத்திலேயே கவிழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இன்னும் சில அடிகள் தேரோட்டம் நிகழ்ந்து, அதன் பின்னர் கவிழ்ந்திருந்தால், இரு தேரின் இரு புறமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நின்றிருப்பார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?