குவியும் தலைவர்கள் !! ராணியின் இறுதிச் சடங்கிற்கு தயாராகும் வெஸ்ட் மின்ஸ்டர் அபே!!

 

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் செப்டம்பர்  8ம் தேதி உயிரிழந்தார் .  அவருக்கு வயது 96. இவருடைய உடல்   லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கடந்த 3 நாட்களாக வைக்கப்பட்டு உள்ளது. சுமார் 8 கிமீ தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. 


இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 2000 தலைவர்கள் இங்கிலாந்தில் கூடியுள்ளனர். இந்தியா சார்பில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அமெரிக்க அதிபர் பைடன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பக்கிம்காம் அரண்மனை நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.  இறுதிச் சடங்கிற்கான முழு ஒத்திகையில் ராணுவம் நேற்று ஈடுபட்டது. குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியின் மீது ராணியின் உடல் வைக்கப்பட்டு, லண்டனின் முக்கிய சாலைகளில் எடுத்து செல்லப்படும்.  

இறந்த ராணியின் கணவர் பிலிப்பின் உடலும், அவருக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்படும். இது ராணியின் விருப்பமாகும்.ராணியின் இறுதிச் சடங்கில் சீன தலைவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால், அதை மீறி சீனாவின்  துணை அதிபர் வாங்க் கியூஷ்ன் கலந்து கொள்வார் . இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு  அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுதான்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!