ஒகேனக்கலில் ஆட்டம் போட்ட நடிகர் விக்ரம்!! வீடியோ வைரல்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பாத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு அறிமுக விடியோ அக்டோபர் 23இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பசுபதி, பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பான் இந்தியா படமாக வெளியாக உள்ள தங்கலான் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.