அலர்ட்! பஞ்சாப்பில் நிலநடுக்கம்! அலறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!

 

சமீபத்தில் நேபாளத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நாள் பலமான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் பாதிப்பு தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்புக்காக எங்கே செல்வது எனத் தெரியாமல் அலறியடித்து தெருக்களில் ஓடி தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் மாநில் அம்ரித்சார் நகரில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 3.42 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி குடும்பம், குடும்பமாக தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த திடீர் நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறும்போது ‘‘இந்த நிலநடுக்கம் அம்ரித்சார் நகரில் இருந்து 145 கி.மீ. வடமேற்கில் சுமார் 120 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்து. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. டெல்லி நொய்டாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இந்த நிலநடுக்கங்கள் நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் அலாரம் தான். நிலநடுக்கம் ஏற்படுகிற சமயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. உயரமான கட்டிடங்களை மென்மேலும் கட்டிக் கொண்டிருக்காமல், எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை அரசு மக்களுக்கு விழிப்புணர்வு மூலமாக சொல்லித் தர வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!