வேலியே பயிரை மேய்ந்தது போல.. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. கைது !!

 

கோவை, தேனி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் கஞ்சா பழக்கம் சில நாட்களாக அதிகரித்து வருகிறது. காவல்துறையிடம் சிக்காமல் இருக்க புகை பிடிக்கும் வகையிலான கஞ்சாவை விட சாக்லேட் வழியிலும் கஞ்சா அதிகரித்து வருகிறது. இது காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

எனினும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கோவையில் மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்து கஞ்சா விற்பனைக்கு உதவிய எஸ்ஐ கைது செய்யப்பட்டார். கோவை நகரில் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் மகேந்திரன் (35). ரத்தினபுரி சங்கனூர் பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்த சந்திரபாபு (33) மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேரை கடந்த 20ஆம் தேதி ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 8.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களின் செல்போன் பேச்சு, கடத்தல் விவகாரம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சந்திரபாபு மற்றும் மொத்த ஆட்களையும் வழிநடத்தியது சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தான் என்ற அதிர்ச்சி  தெரியவந்தது. இவர் கஞ்சா கடத்தல், விற்பனைக்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்து, அந்த கும்பலுக்கு தலைவன் போல செயல்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதைத்தொடர்ந்து ரத்தினபுரி போலீசார், கஞ்சா விற்பனைக்கு உதவியதாக வழக்குப்பதிந்து எஸ்ஐ மகேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போன் தொடர்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதில், ஒரு கஞ்சா கடத்தல் நடத்தால் அதற்கு எஸ்ஐ மகேந்திரன் ரூ.1 லட்சம் வாங்குவாராம். மாநில அளவில் பெரிய அளவில் கஞ்சா கடத்தல் கும்பல், மாநிலம் விட்டு மாநிலம் கஞ்சா கடத்துபவர் என பட்டியல் போட்டு மகேந்திரன் பணம் வசூல் செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. 

இதையடுத்து, எஸ்ஐ மகேந்திரனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

கஞ்சா வழக்கில் கைதானவர்களிடம் அவர்களின் செல்போனை எடுத்து எஸ்ஐ மகேந்திரன் பார்த்துள்ளார். பின்னர் கஞ்சா யாரிடம் வாங்க வேண்டும் எப்படி வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார், மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனையில் அதிக பணம் புழங்குவதை அறிந்து அவருக்கும் பணத்தின் மீது ஆசை வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பின்னர் கஞ்சா விற்பனைக்கு எங்களுக்கு உதவினார். அதனால் அதிக அளவில் பணம் கிடைத்தது அவருக்கும் அதிக பணம் சென்றது இதனால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம் விலை எப்போது போலீசார் வருவார்கள் எப்படி வருவார்கள் என்று விவரங்களையும் எங்களுக்கு முன்கூட்டியே முடிவு கூறிவிடுவார் இதனால் சிக்காமல் இருந்தும் ஆனா எப்போது சிக்கிவிட்டோம், என்று தெரிவித்தனர்